திடீரென முடிவு மாறியது எப்படி என்று ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. மொத்தம் 538 பிரதிநிதிகளை கொண்ட தேர்வு குழுவில், 270 பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெறுபவரே வெள்ளை மாளிகையை கைப்பற்ற முடியும்.
கடைசிக் கட்ட தகவலின் படி குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 213 வாக்குகள் பெற்றுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 238 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இருதரப்பிலும் போட்டி மிக கடுமையானதாகவே இருக்கிறது.
அமெரிக்காவில் கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த முறைதான் மிக அதிக அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில் எதிர்கட்சியினர் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்வதாக குற்றம்சாட்டியுள்ள ட்ரம்ப், வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று குரலெழுப்பி உள்ளார். உச்சநீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும், தேர்தலில் ஏற்கனவே தாம் வெற்றி பெற்று விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை எண்ணத் தொடங்கிய இரவு பெரும்பாலான மாநிலங்களில் தான் முன்னிலையில் இருந்ததாகவும், ஆனால், திடீரென ஒவ்வொரு மாநிலங்களிலும் எதிரான முடிவுகள் வெளியாகியிருப்பது விசித்திரமாக இருக்கிறது எனவும் விமர்சித்துள்ளார். ஒவ்வொரு முறையும் தபால் வாக்குகள் எண்ணப்படும்போதெல்லாம் முடிவுகள் எப்படி மாறுகின்றன என்பது தெரியவில்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், வெற்றிக்கு அருகில் நிற்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஜோ பைடன். அனைவரின் வாக்குகளும் எண்ணப்படும் வரை ஓய்வெடுக்க மாட்டேன் என்று ஜோ பைடனின் தேர்தல் பிரச்சாரக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஜோ பைடனின் தேர்தல் பிரச்சார மேலாளர் கூறும்போது, “வாக்கு எண்ணிக்கையைத் தடுத்து நிறுத்த ட்ரம்ப் முயன்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம். இதனை எதிர்கொள்ளச் சட்டரீதியான குழு எங்களிடம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான வாக்குகள் இன்னும் எண்ணப்படாததால் இதுவரை எந்த தரப்பும் ஆட்சியமைக்க உரிமைக் கோரவில்லை.
Loading More post
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!