ஏஏஏ படத்தில் அறைகுறையாக வந்து சென்ற ஒரு பாடலை, முழுமையாகத் தொகுத்து இப்போது இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். கவிஞர் வைரமுத்து எழுதிய ரத்தம் என் ரத்தம் எனும் அந்தப் பாடல் திரைப்படத்தில் தொடர்ச்சியாக இடம்பெறாமல் இடையிடையே வந்து சென்றது. இந்தப்பாடல் முழுவதும் சிம்புவின் கால் தரையில் படாமல் நடனத்தை அமைத்திருந்ததாக நடன இயக்குநர் ராபர்ட் பெருமையாக கூறியிருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசயமையத்துள்ள இந்தப் பாடல் முழுமையாக தொகுக்கப்பட்டு தொடர்ச்சியாக வரும் வகையில் இன்று மாலை 5 மணிக்கு லஹரி நிறுவனம் வெளியிட்டது. இந்தப்பாடல் உண்மையான சிம்பு ரசிகர்களுக்கு அர்ப்பணம் என அந்நிறுவனம் இந்தப்பாடலை வெளியிட்டு இருக்கிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ஏஏஏ படம் திரைக்கு வந்த சில தினங்களில் தோல்வியைத் தழுவியது. இந்தப்படம் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான நிலையில், அடுத்த வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார் சிம்பு. ஏஏஏ படம் இரு பாகங்களாக தயாரிக்கப்பட திட்டம் போட்டு அதுவும் கைவிடப்பட்டு விட்டது. சிம்பு 2007ம் ஆண்டு தொடங்கி பாதிப்படப்பிடிப்புடன் தடைப்பட்ட கெட்டவன் படத்தை மீண்டும் ஆரம்பித்து அவரே இயக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. இந்த நிலையில் ஏஏஏ பாடலை சிம்பு வெளியிட்டுள்ளார்.
Loading More post
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!