கோழி ஒன்று நாய்க்குட்டியை பாசமுடன் தனது முதுகில் சுமந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றுதான் ‘உப்பு மூட்டை’ விளையாட்டு. ஆனால், போட்டிகள் இல்லாமலும் உலகின் அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளும் பாசமுடன் விளையாடும் விளையாட்டு உப்பு மூட்டை விளையாட்டுதான். குழந்தைகள் அழுதால், அடம் பிடித்தால் பெற்றோர்கள் குழந்தையை தங்கள் தோல்மேல் ஏற்றிக்கொண்டு உப்பு மூட்டையை சுமப்பதுபோல் சுமந்து ’உப்போ உப்பு, யாருக்கு வேணும் உப்பு, உனக்கு வேணுமா உனக்கு வேணுமா” என்று பாடி குழந்தைகளை குதூகலிக்க வைப்பார்கள்.
Onward noble steed pic.twitter.com/gKPM9FZrtX
— The Feel Good Page ❤️ (@akkitwts) November 4, 2020Advertisement
எல்லோருக்கும் பிடித்த இந்த உப்பு மூட்டை விளையாட்டை விலங்குகளுக்கு மட்டும் பிடிக்காமல் இருக்குமா என்ன? The feel good page என்ற ட்விட்டர் பக்கத்தில், நாய்க்குட்டி ஒன்று கோழி அமர அதன் மீது அழகாக ஏறி அமர்ந்துகொள்கிறது. சிவப்பு நிறக்கோழி வெள்ளைநிற நாய்க்குட்டியை முதுகில் ஏற்றிக்கொண்டு வலம் வருவது sooooooooooooooooooooooooo cute என்று சொல்ல வைக்கிறது. நாய்க்குட்டியை கோழி நட்புடன் முதுகில் அமர வைத்து நட்பு பாராட்டுவதை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.
Loading More post
ரெய்னா கிரீசுக்கு வந்தபோது டிவிக்கு முன்னர் ஆரத்தி எடுத்து வழிபட்ட ரசிகர்!
அம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்