இந்தியாவுக்கு விளையாடுவதை விட ஐபிஎல் தொடர்தான் ரோகித் சர்மாவுக்கு முக்கியமா என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கடந்த சில போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக ஆஸ்திரேலியா செல்ல இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியிலும் அவர் இடம்பெறவில்லை. அவருக்கு 6 வாரம் ஓய்வு வேண்டும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் களமிறங்கினார். இது கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் வெங்சர்கார் "கடந்த சில நாள்களுக்கு முன்புதான் இந்திய அணியின் மருத்துவர் ரோகித் சர்மாவின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பித்தார். அதனடிப்படையில் அவர் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. ஆனால் அவர் ஐபிஎல் தொடரில் நீடிக்கிறார் விளையாடுகிறார். இது மிகவும் விநோதமாக இருக்கிறது. இந்தியாவுக்கு ரோகித் சர்மா மிகவும் முக்கியமான ஒரு வீரர்" என்றார்.
மேலும் "என்னுடைய கேள்வி என்னவென்றால் ரோகித் சர்மாவுக்கு, இந்தியாவுக்கு விளையாடுவதை விட ஐபிஎல் முக்கியமானதாக படுகிறதா ? நாட்டுக்காக விளையாடுவதைவிட கிளப்புக்காக விளையாடுவதை விரும்புகிறாரா. இது தொடர்பாக பிசிசிஐ நிச்சயம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் பிசிசிஐ மருத்துவர் ரோகித்தின் காயத்தை சரியாக பரிசோதித்து சொல்லவில்லையா " என்று சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார் திலீப் வெங்சர்கார்.
Loading More post
’8 ரன் கொடுத்து 5 விக்கெட்’ மிரட்டிய ஜோ ரூட் - 145 ரன்னில் சுருண்ட இந்திய அணி!
கோவை: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி பிரதமர் மோடி மரியாதை
சீமானுக்கு டாடா... ‘தமிழ் தேசிய புலிகள்’ புதிய கட்சியை தொடங்கினார் மன்சூர் அலிகான்!
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த மத்திய அரசு!
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?