காதலுக்கு தடைவிதித்த காதலியின் சகோதரனை கொன்ற யுடியூபர்

Noida-YouTuber-allegedly-killed-girlfriend-brother-who-opposed-their-love

காதலியுடன் பேசுவதற்கு தடையாக இருந்த காதலியின் சகோதரனை கொலைசெய்துள்ளார் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த யுடியூபர்.


Advertisement

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர் நிஜாமுல் கான். பைக் ஸ்டன்டரான இவர் சொந்தமாக ஒரு யுடியூப் சேனலை நடத்திவருகிறார். அதற்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ் இருக்கின்றனர். இவர் ஒரு பெண்ணைக் காதலித்து வந்திருக்கிறார். ஆனால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அந்தப் பெண்ணின் சகோதரர் கமல் ஷர்மா(26), நிஜாமுலை அடித்ததுடன், தன் சகோதரியின் செல்போனையும் வாங்கி வைத்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த நிஜாமுல், அக்டோபர் 28ஆம் தேதி நொய்டாவில் இஸ்கான் கோயிலுக்கு அருகே கமல் ஷர்மா பைக்கில் சென்றுகொண்டிருக்கையில், தனது நண்பர் பைக்கை ஓட்ட பின்புறமாக அமர்ந்துகொண்டு ஷர்மாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றிருக்கிறார்.


Advertisement

image

அன்றிரவு கமல் ஷர்மா மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார். துப்பாக்கி குண்டு துளைத்த காயம் முதலில் வெளியே தெரியாததால் சாலை விபத்தில் இறந்ததாக போலீசார் கருதியிருக்கின்றனர். ஆனால் பிரேத பரிசோதனையில் உடலில் துப்பாக்கிக் குண்டு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால் சந்தேகித்தப் போலீசார் தங்கள் விசாரணையைத் தொடர்ந்திருக்கின்றனர். இதுகுறித்து கமல் ஷர்மாவின் சகோதரர் நரேஷ் ஷர்மா, கொடுத்த புகாரின்பேரில் டெல்லிக்கு அருகே சென்றுகொண்டிருந்த மூன்றுபேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

எஸ்.ஏ சந்திரசேகர் தொடர்ந்த வழக்கு... தயாரிப்பாளருக்கு 3 மாதம் சிறை 


Advertisement

விசாரணையில், நிஜாமுல் யுடியூப் சேனல் வைத்து சம்பாதித்து வருவதாகவும், அதிலிருந்து சிறிது பணத்தை சுமித் மற்றும் அமித் என்ற தன் இரண்டு நண்பர்களுக்கும் கொடுத்து இந்தக் குற்றத்திற்கு அவர்கள் உதவியைப் பெற்றதாகவும் நொய்டா காவல் அதிகாரி லவ் குமாரிடம் தெரிவித்திருக்கிறார். நிஜாமுலின் இந்த திட்டம் குறித்து ஷர்மாவின் சகோதரிக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகவும், இதுகுறித்து மேலும் விசாரிக்கவுள்ளதாகவும் குமார் கூறியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement