ட்ரம்பின் வெற்றிக்காக இந்துசேனா அமைப்பினர் டெல்லியில் சிறப்பு பூஜை

US-Elections-2020--Hindu-Sena-Offers-Special-Prayers-at-Temple-Wishing-Donald-Trump-s-Victory

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற வேண்டி இந்துசேனா அமைப்பினர் டெல்லியில் சிறப்பு பிரார்த்தனை.


Advertisement

 image

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று தொடங்கப்பட்ட நிலையில், இந்து சேனா குழுவின் உறுப்பினர்கள் தேர்தலில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தனர். கிழக்கு டெல்லியில் உள்ள ஒரு கோவிலில் ஒரு அர்ச்சகர் முன்னிலையில் இந்த சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. வேண்டுதலின் போது, சிறப்பு மந்திரங்கள் மற்றும் முழக்கங்களும் செய்யப்பட்டன. இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்த உலகின் ஒரே தலைவர் டொனால்ட் டிரம்ப் தான் என்றும், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் உலகம் அவருக்கு ஆதரவளிக்க வேண்டிய நேரம் இது என்றும் கோவில் அர்ச்சகர் வேத் சாஸ்திரி தெரிவித்தார்.


Advertisement

இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா, " இந்த முறை மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றிக்கு நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். தற்போது சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா எங்களுக்கு ஒரு நல்ல நட்பு நாடாக இருப்பதால் அவரின் வெற்றியை வேண்டுகிறோம் " என தெரிவித்தார்

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement