பீகாரில் தேர்தல் பேரணியின்போது அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார் மீது வெங்காயம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
பீகார் மாநிலம், மதுபானி பகுதியில் ஹர்லாகியில் இன்று நடைபெற்ற தேர்தல் பேரணி மேடையில் பேசும்போது பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் மீது வெங்காயம் வீசப்பட்டது, இந்த சம்பவத்தின் வீடியோ ஆன்லைனிலும் வெளிவந்துள்ளது. இதனால் முதலில் அதிர்ச்சியடைந்த முதல்வர் பிறகு சுதாரித்துக்கொண்டு "மேலும் தூக்கி எறியுங்கள்" என்று கூறினார், அதன்பின்னர் அவரது பாதுகாப்புக் காவலர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சித்தனர்.
#Correction: Onions pelted during Chief Minister Nitish Kumar's election rally in Madhubani's Harlakhi.#BiharPolls pic.twitter.com/0NwXZ3WIfm — ANI (@ANI) November 3, 2020
பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 28ஆம் தேதி நிறைவுபெற்றது, இரண்டாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்படியான ஒரு பிரசாரத்தின் போதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவுக்கு கருணாஸ் ஆதரவு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி
அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்: ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல்?
"வாக்குகள் சிதறாது; உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடக்கம்" - டிடிவி தினகரன்
ஒன்றிரெண்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட சட்டப்பேரவையில் நுழைந்துவிடக் கூடாது: மார்க்சிஸ்ட்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!