மகளிர் தினத்தில் ஒருநாள் மட்டும் பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை நிர்வகித்த தமிழகத்தை சேர்ந்த பெண் சினேகா மோகன்தாஸ் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார்.
ஆதரவற்ற மக்களுக்காக “ஃபுட் பேங்க் இந்தியா” என்ற அமைப்பை நடத்திவரும் சினேகா மோகன் தாஸின் சேவையை பாராட்டி இந்த ஆண்டு மார்ச்-8 மகளிர் தினத்தன்று, பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது.
தற்போது சினேகா மோகன்தாஸ் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். இவருக்கு சென்னை மண்டல மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி சினேகா தனது டிவீட்டில் “என்னை ஒரு நல்ல தலைவராக தேர்ந்தெடுத்து நம்புவதற்கும்,மக்கள் நீதி மய்யத்தின் துணை மாநில செயலாளர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணிசென்னை மண்டலத்திற்கு நியமித்த மரியாதைக்குரிய தலைவர் & நம்மவர் உயர்திரு டாக்டர் கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி” என கூறியுள்ளார்.
என்னை ஒரு நல்ல தலைவராக தேர்ந்தெடுத்து நம்புவதற்கும்,மக்கள் நீதி மய்யத்தின் துணை மாநில செயலாளர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி சென்னை மண்டலத்திற்கு நியமித்த மரியாதைக்குரிய தலைவர் & நம்மவர் உயர்திரு டாக்டர் கமல்ஹாசன் @ikamalhaasan அவர்களுக்கு நன்றி ?? @maiamofficial #Maiam https://t.co/0mqIHKsy4x— Sneha Mohandoss (@snehamohandoss) November 2, 2020
2021 சட்டப்பேரவை தேர்தலில் மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று கூறியுள்ள கமல், கடந்த இரு தினங்களாக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?