ஏகலைவா விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட கேஎல் ராகுல்..!

KL-Rahul-Thanks-Karnataka-Government-For-Giving-Him-Ekalavya-Award

கர்நாடகாவில் விளையாட்டுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அம்மாநில அரசு ஏகலைவா விருது வழங்கி சிறப்பிக்கும். அந்த வரிசையில் இந்த வருடம் கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுலுக்கு ஏகலைவா விருது அறிவித்துள்ளது கர்நாடக அரசு. தன்னை விருதுக்கு தேர்வு செய்த கர்நாடக அரசுக்கு கேஎல் ராகுல் நன்றி தெரிவித்துள்ளார்.


Advertisement

image

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், என்னை ஏகலைவா விருதுக்கு தேர்வு செய்த கர்நாடக அரசுக்கு நன்றி. என்னுடைய பயிற்சியாளர்கள், சக வீரர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் ஆதரவின்றி இது சாத்தியமில்லை.மாநிலத்தின் மற்றும் இந்தியாவின் பெருமைக்காக நான் கடுமையாக உழைப்பேன் என தெரிவித்துள்ளார். விருது அறிவிக்கப்பட்டுள்ள கேஎல் ராகுலுக்கு ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.


Advertisement

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருக்கும் ராகுல் சிறப்பான பங்களிப்பை அளித்தார். 14 ஆட்டங்களில் அவர் 670 ரன்களை எடுத்துள்ளார். தொடக்கத்தில் சொதப்பிய பஞ்சாப் அணி இரண்டாம் கட்டத்தில் தொடர்ந்து வெற்றிகளை குவித்தது. ஆனால் கடைசி போட்டியில் சென்னையுடன் தோல்வியை சந்தித்ததால் பிளே ஆஃப்க்குள் செல்லும் வாய்ப்பை இழந்தது பஞ்சாப்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement