ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது. இதனையடுத்து பெங்களூர் இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது.
ஐபிஎல் போட்டியின் 55-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணிகள் அபுதாபியில் இன்று மோதுகின்றன. இரு அணிகளுமே இதுவரை ஆடிய 13 ஆட்டங்களில் 7 வெற்றிகளைப் பெற்று 14 புள்ளிகளுடன் இருக்கின்றன.
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதுடன், புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தை உறுதி செய்யும். மாறாக தோல்வியடையும் அணி பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய, மும்பை -ஹைதராபாத் அணிகள் மோதும் ஆட்டத்தின் முடிவை சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.
டெல்லி அணியில் ரஹானே, சாம்ஸ் மற்றும் அக்ஸர் படேல் சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூர் அணியில் துபே, ஷபாஸ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Loading More post
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
25 தொகுதிகளாவது ஒதுக்கினால்தான் கையெழுத்து: தேமுதிக திட்டவட்டம்