ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ஷேன் வாட்சன் தன்னுடைய ஓய்வை அறிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
2018 ஐபிஎல் தொடரில் சாம்பியன், 2019 தொடரில் ரன்னர் அப் என தொடர்ந்து சாதனைப்படைத்து வந்த சிஎஸ்கே அணிக்கு இந்த ஐபிஎல் தொடர் மோசமாகவே அமைந்தது. இந்த ஐபிஎல் கொடரில் 6 வெற்றிகளை மட்டுமே பெற்று 12 புள்ளிகளுடன் 7 ஆம் இடத்தை பிடித்தது சிஎஸ்கே. 2018, 2019 தொடரில் சிறப்பாக விளையாடிய ஷேன் வாட்சன், இந்தாண்டு தொடரில் சுமாரான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தினார்.
இந்தாண்டு ஐபிஎல்லில் ஒரே ஆறுதல் கடைசி மூன்று போட்டிகளில் வெற்றிப்பெற்று, இந்தத் தொடரை வெற்றியுடனே முடித்தது. இந்நிலையில் நேற்றைய கடைசி ஆட்டத்துக்கு பின்பு சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் ஷேன் வாட்சன் தான் ஓய்வுப்பெறுவதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து "டைம்ஸ் ஆஃப் இந்தியா" வெளியிட்டுள்ள செய்தியில்.
சிஎஸ்கேவின் ஓய்வு அறைக்கு சென்ற ஷேன் வாட்சன் "நான் ஓய்வுப்பெறுகிறேன். சிஎஸ்கே அணியில் இத்தனை ஆண்டுகாலம் விளையாடியதை பெருமையாக கருதுகிறேன்" என தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணிக்காக 2018 இல் 555 ரன்களும், 2019 இல் 398 ரன்களும், 2020 இல் 299 ரன்களை எடுத்துள்ளார். இந்தாண்டு அவருடைய அதிகப்ட்ச ஸ்கோர் 83 என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி