[X] Close >

நஷ்டஈடு கோர குழு அமைத்தது கத்தார்

Qatar-wants-monetary-compensation-for-Arab-embargo

வளைகுடா நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடையால் ஏற்பட்டுள்ள இழப்புகளுக்‍கு நஷ்டஈடு கோருவதற்காக, கத்தார், குழு ஒன்றை அமைத்துள்ளது. 


Advertisement

தீவிரவாதிகளுக்‍கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, கத்தாருடனான தூதரக உறவை முறித்து கொள்வதாக சவுதி அரேபியா உள்ளிட்ட கூட்டணி நாடுகள், அறிவித்தன. கத்தாருடன் மீண்டும் இயல்புநிலை ஏற்பட வேண்டுமானால், 13 கோரிக்‍கைகளை ஏற்க வேண்டும் என விதித்த நிபந்தனைகளை கத்தார் நிராகரித்துவிட்டது. கத்தார் தனிமைப்படுத்தப்பட்டதன் காரணமாக, அந்நாட்டில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் பாதிக்‍கப்பட்டுள்ளன. இதற்காக சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து இழப்பீடு கோருவதற்காக, குழு ஒன்றை கத்தார் அமைத்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டின் தலைமை அரசு வழக்‍கறிஞர்  தெரிவித்துள்ளார்.
 

Related Tags : qatarcompensationarabcountries
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close