ருதுராஜ் கெய்க்வாட் இளம் வயது விராட் கோலியை நினைவுப்படுத்துகிறார் என்று சிஎஸ்கே வீரர் டூப்ளசிஸ் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறாமல் வெளியேறிவிட்டாலும் தங்களுடைய கடைசி 3 போட்டிகளில் சிறப்பான வெற்றியைப் பெற்றது. இந்த மூன்று போட்டியிலும் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார். தொடக்கத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட இரண்டு போட்டிகளில் ஒன்றில் டக் அவுட், ஒன்றில் சொற்ப ரன்னிலும் ஆட்டமிழந்தாலும், இறுதியில் அசத்தி நல்ல பெயரை வாங்கியுள்ளார் ருதுராஜ்.
இது குறித்து சிஎஸ்கே பேட்ஸ்மானான டூப்ளசிஸ் கூறும்போது, "இந்த சீசன் எங்களுக்கு வருத்தம் ஏற்படுத்தும் வகையில் அமைந்து விட்டது. ஆனால், நாங்கள் 3 வெற்றிகளுடன் போட்டியை முடித்துள்ளோம். எங்களுடைய அணியில் விளையாடும் ருதுராஜ் கெய்க்வாட் இளம் விராட் கோலி போல் செயல்படுகிறார்" என்றார்.
மேலும் " நெருக்கடியான நேரத்தில் நின்று விளையாடுகிறார் என எனக்கு தோன்றுகிறது. இளம் வீரர்கள் அடுத்த நிலைக்கு செல்வதற்கு இதுபோன்ற தகுதிகளே தேவையாக உள்ளது. எனக்குள் இன்னும் நிறைய கிரிக்கெட் மிச்சமிருக்கிறது. முழுவதும் ஃபிட்டாகவே இருக்கிறேன். அதனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு விளையாடுவேன்" என்றார் டூப்ளசிஸ்.
Loading More post
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
25 தொகுதிகளாவது ஒதுக்கினால்தான் கையெழுத்து: தேமுதிக திட்டவட்டம்
அசாதுதீன் ஒவைசியின் கட்சிக்கு தமிழகத்தில் பட்டம் சின்னம் ஒதுக்கீடு!
வேட்பாளர் தேர்வில் மிரட்டல்.. நந்திகிராம் தொகுதியில் போட்டி - அசத்தும் மம்தா பேனர்ஜி!