கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்க தடை என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் மாநிலத்தில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்க தடை விதிக்க ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. நேற்று கொரோனா வைரஸ் நிலைமையை மறுபரிசீலனை செய்தபோது, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இந்த சவால் மிகுந்த நேரத்தில் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பது அரசாங்கத்திற்கு மிக முக்கியமானது என்று கூறியுள்ளார்.
மாஸ்க் அணிவதை சட்டமாக்குகிறது ராஜஸ்தான்.!
மாநிலத்தில் பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும், முறையான சான்றிதழ் இல்லாமல் இயங்கும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாகனங்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கெலாட் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில் மக்கள் தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் முதல்வர் அசோக் கெலாட், ’’கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக மாநிலத்தில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை செய்வதற்கான முடிவை மாநில அரசு எடுத்துள்ளது’’ என தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Loading More post
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!