உத்தர பிரதேசத்தில் தன் மூத்த சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி ஜலாவுன் மாவட்ட காங்கிரஸ் தலைவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர் இரண்டு சகோதரிகள்.
உத்தரபிரதேச மாநிலம் ஜலாவுன் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அனுஜ் மிஸ்ரா(42). ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் ரயில் நிலைய சாலையில், இரண்டு பெண்கள் ‘இனிமேல் இப்படி செய்வாயா’ என்றுக் கூறிக்கொண்டே மிஸ்ராவை செருப்பால் அடித்து தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மிஸ்ரா இருவரிடமும் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறார். ஒரு பெண்ணின் காலையும் தொட்டுக் கும்பிடுகிறார்.
The women who were seen in the viral video, beating up Congress district president Anuj Mishra say, "He was sexually harassing us for many days. We complained about him to Ajay Kumar Lallu ji but no action was taken." #Jalaun pic.twitter.com/ONkL3KiCVV
— ANI UP (@ANINewsUP) November 1, 2020Advertisement
இதுபற்றி காவல்துறை அதிகாரி எஸ்.பி யெஸ்வீர் சிங், ‘’அனுஜ் மிஸ்ரா காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவராக உள்ளார். ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், பாலியல் தொல்லைக் கொடுத்த குற்றத்திற்காக இந்திய சட்டப்பிரிவு 354ஏஇன் கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் கொடுத்த வழக்கில், மிஸ்ரா தினமும் அந்தப் பெண்ணுக்கு போன் செய்து பாலியல் தொல்லைக் கொடுத்ததாக கூறியுள்ளார்.
கிடைத்த தகவலின்படி சகோதரிகள் இருவருக்கும் அவரை பல வருடங்களாகத் தெரியும். இது அவர்கள் குடும்பங்களுக்கும் தெரியும். குற்றம்சாட்டியவரும், குற்றம் சாட்டப்பட்டவரும் வெவ்வேறு இடத்தைச் சேர்ந்தவர்கள். வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்’’ என்று கூறியுள்ளார். மேலும் இதற்குமுன்பு அந்த நபர்மீது எந்த வழக்கும் பதிவுசெய்யப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
A case of sexual harassment has been registered in the matter (Congress district president Anuj Mishra being beaten up by two women for allegedly sexually harassing them). Both parties have known each other since years, we're investigating the case: Orai Circle Officer #Jalaun pic.twitter.com/UfMwMCOwDX
— ANI UP (@ANINewsUP) November 1, 2020Advertisement
இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லல்லு தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு கூறுகையில், காங்கிரஸ் ஒழுங்காற்றுக் குழு இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒன்றரை மாதங்களாக அந்த பெண் பணிக்கு வராததால் சமீபத்தில் மிஸ்ரா அந்தப் பெண்ணை பணியிலிருந்து நீக்கியதாகக் கூறியதாகவும், மேலும், அந்த பெண் சரியாக வேலை செய்யவில்லை என்றும் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். அந்த பெண் இதற்குமுன்பு மிஸ்ராமீது புகார் கொடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Loading More post
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
கரூர்: ராகுல் காந்திக்கு பழைய 500 ரூபாய் நோட்டை கொடுத்த விவசாயி!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்