அனைத்து உள்நாட்டு விமானங்களின் எகானமி வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளுக்கான உணவுப் பட்டியலில் இருந்து அசைவ உணவுகள் நீக்கப்படுவதாக ஏர்இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முடிவின் மூலம் ஆண்டொன்றுக்கு 8 கோடி ரூபாயை மிச்சப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஏர் இந்தியா நிறுவன தலைவரும், நிர்வாக இயக்குநருமான அஷ்வனி லொஹானி, இந்த நடவடிக்கையின் மூலம் உணவு வீணாவதும், தேவையற்ற குழப்பங்களும் தவிர்க்கப்படுவதாக கூறினார். கட்டணத்தை குறைப்பதற்காகவும், உணவு வீணாவதை தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார். வருடத்திற்கு 400 கோடி ரூபாயை உணவிற்காக செலவிடும் ஏர் இந்தியா நிறுவனம், சைவ உணவை விரும்பும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் பிசினஸ் மற்றும் எக்சிக்யூட்டிவ் வகுப்பு பயணிகளுக்கு தொடர்ந்து அசைவ உணவு வழங்கப்படும் என்றும் ஏர் இந்தியா கூறியுள்ளது. 90 நிமிடங்களுக்கும் குறைவான பயண தூரத்தை உடைய அனைத்து விமானங்களிலும் அசைவ உணவுகள் வழங்குவதை 6 மாதங்களுக்கு முன்னதாகவே ஏர்இந்தியா நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, கடந்த மாதம் முதல் சாலட் உள்ளிட்ட உணவுகள், சில மேகசின்கள் வழங்குவதையும் ஏர்இந்தியா நிறுத்தியது.
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?