திண்டிவனத்தில் தலைமைக் காவலர் ஒருவர் மதுபோதையில் காரை ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பெரமண்டூர் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் கோபாலபுரத்தில் உள்ள தனது வயல் வெளியை பார்வையிட்டு விட்டு புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டுக்கு இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கி வந்த போலீஸ் கார் ஒன்று கோபாலபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது பின்பக்கமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த தர்மராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் காரை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் காரை 3 கிலோ மீட்டர் தூரம் வேகமாக துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.
மேலும் கார் ஓட்டுனருக்கு தர்ம அடி கொடுத்து மயிலம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், விபத்தை ஏற்படுத்தியவர் செய்யாறில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் குமரவேல் என்பதும் தனது நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சென்று மது அருந்தி விட்டு, மீண்டும் செய்யாறு செல்லும்போது மது போதையில் விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது.
Loading More post
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் ஏப்ரல் 6-ல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'