அருணாச்சலப் பிரதேசத்திற்கு மிக அருகில் ரயில்பாதை அமைக்கும் சீனா..!

China-set-to-build-key-rail-line-close-to-Arunachal-border

சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யானுக்கும் திபெத்தின் லின்ஜிக்கும் இடையில் ரயில்பாதை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Advertisement

இந்த ரயில்பாதை இந்திய எல்லை அருகே அமைய உள்ளது. இரண்டு சுரங்கங்கள், ஒரு பாலம் ஆகியவற்றுடன் இதற்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்க உள்ளதாக கடந்த சனிக்கிழமை அன்று சீனா ரயில்வேத் துறை அறிவித்துள்ளது.

இந்த ரயில்வே தடம் செல்லும் லின்ஷி எனும் பகுதி இந்தியாவின் அருணாச்சல பிரதேச எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஒரு பகுதியாக சீனா கூறிவரும் நிலையில், அம்மாநில எல்லையையொட்டி ரயில்பாதை அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

image

புதிதாக கட்டப்படும் யான்-லின்ஷி ரயில்பாதை 1,011 கி.மீ. தொலைவு கொண்டது. இத்தடத்தில் ரயில்கள் மணிக்கு 120 முதல் 200 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிச்சுவான்-திபெத் ரயில்வே திட்டத்தின் மொத்த செலவு சுமார் 319.8 பில்லியன் யுவான் (47.8 பில்லியன் டாலர்) என்று குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

யான்-லின்ஷி தடத்தில் சுற்றுலாவை வளர்க்க சீனா விரும்புகிறது என்று கூறப்பட்டாலும் எல்லையை படைகள் விரைவில் அடைய இந்தியா சாலைகளை கட்டி வரும் நிலையில் சீனா பதிலுக்கு ரயில்பாதையை எல்லை அருகே அமைத்து வருவதாக கூறப்படுகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement