ஐபிஎல் தொடரில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சிஎஸ்கே. இருப்பினும், 6 வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது. ப்ளே ஆஃப் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது. இனி அடுத்த ஐபிஎல் சீசன் தான். ஆனால் அடுத்த சீசனில் தோனி இருப்பாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது.
ஒவ்வொரு போட்டி முடிந்த பின்பும் அது வெற்றியோ தோல்வியோ எதிரணி வீரர்கள் தோனியிடம் வந்து ஆலோசனை கேட்பார்கள். அவர்களிடம் தன்னுடைய அனுபவத்தையும் பகிர்ந்துக்கொள்வார் தோனி. கொல்கத்தா அணியுடனான வெற்றிக்கு பின்பு கூட வருண் சக்கரவர்த்தி தோனியிடம் வெகு நேரம் பேசிக் கொண்டு இருந்தார்.
இது மட்டுமல்லாமல் கொல்கத்தா அணியின் வீரர்கள் பலரும் ஜெர்சியில் தோனியிடம் கையெழுத்துப் பெற்றுச் சென்றனர். இதற்குமுன்பு மும்பை அணியின் ஹர்திக் பாண்ட்யா, ராஜஸ்தான் அணியின் பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கும் ஜெர்சியில் கையெழுத்திட்டு பரிசாக கொடுத்தார் தோனி. இதனால் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வுப்பெற்றுவிடுவார். அதனால்தான் வீரர்கள் இப்போதே அவரின் நினைவாக கையெழுத்து வாங்குகின்றனர் என்று பேசப்பட்டது. ஆனால் அனைவரின் சந்தேகத்துக்கும் நேற்று ’நிச்சயமாக இல்லை’ என்ற வார்த்தையை சொல்லி பதிலளித்தார் தோனி.
போட்டிக்கு பின்னர் பேசிய தோனி, ஜெர்சியில் கையெழுத்திட்டு கொடுத்ததால் நான் ஓய்வுபெற போவதாக அவர்கள் நினைத்திருக்கலாம். அடுத்த ஐபிஎல்க்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. அதேபோல் அப்போதெல்லாம் ஊரடங்கெல்லாம் இருக்காது என நம்புகிறேன். அதனால் விளையாட்டில் கவனம் செலுத்தலாம். ஊரடங்கு இல்லை என்றால் அதிகம் கவனம் செலுத்தி திட்டமிட முடியும் என தெரிவித்துள்ளார்
Loading More post
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
தமிழக பேருந்துகளை சிறைபிடித்த ஆந்திர அதிகாரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
"இது மலிவான செயல் பெய்ன்..." - அஸ்வின் விவகாரத்தில் கொதித்த கிரேக் சேப்பல்!
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு