சிஎஸ்கே மீண்டு வரும் என்று அந்த அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 9 விக்கெட் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சிஎஸ்கே. இருப்பினும், 6 வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது. ப்ளே ஆஃப் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது. இனி அடுத்த ஐபிஎல் சீசன் தான்.
போட்டி முடிந்த பின்னர் பேசிய தோனி, “இது மிகவும் வித்தியாசமான ஒரு சீசனாக அமைந்துவிட்டது. நாங்கள் நிறைய தவறுகள் செய்துவிட்டோம். கடந்த நான்கு போட்டிகளில் நாங்கள் எப்படி விளையாட வேண்டும் என்பதை காட்டிவிட்டோம். எங்களுடைய வீரர்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. ஏனெனில் 7-8 போட்டிகள் தோல்வி அடைந்திருப்பது மிகவும் நெருக்கடியானது. உங்களால் கிரிக்கெட்டை மகிழ்ச்சியாக விளையாட முடியாது.
"We'll come back strong, that's what we are known for." ?? #WhistlePodu #Yellove pic.twitter.com/tCRmfDcTCZ — Chennai Super Kings (@ChennaiIPL) November 1, 2020
எங்களது ஒட்டுமொத்த குரூப்பையும் மாற்ற வேண்டியுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளை கணக்கில் கொண்டு மாற்றங்களை கொண்டு வர வேண்டும். எங்களுக்காக 10 ஆண்டுகள் விளையாடிய வீரர்களை கொண்டு ஐபிஎல் தொடரை தொடங்கினோம். அவர்கள் 10 வருடம் நல்ல ஒத்துழைப்பை கொடுத்தார்கள். இனி, அடுத்த தலைமுறையிடம் அணியை கொடுக்க வேண்டியுள்ளது.
வலிமையுடன் மீண்டு வருவோம். அப்படி மீண்டு வருவதுதான் எங்களின் வழக்கம். நாங்கள் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறோம். இன்னும் இரண்டு புள்ளிகள் இருந்திருந்தால் ப்ளே ஆஃப்க்கு செல்ல வாய்ப்பாக இருந்திருக்கும். இந்த சீசனில் தான் ஒரே ஒரு டீம் சிறப்பாக விளையாடியுள்ளது. அல்லது பெரும்பாலான அணிகள் சிறப்பாக விளையாடியுள்ளது” என்றார்.
Loading More post
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
கரூர்: ராகுல் காந்திக்கு பழைய 500 ரூபாய் நோட்டை கொடுத்த விவசாயி!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்