சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான மிக முக்கியமான போட்டியில் பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 53வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ராகுல் நிதானமாக விளையாட, மயங்க் அகர்வால் சற்றே அதிரடியாக விளையாடினார். 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் நிகிடி பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆனார் மயங்க்.
பின்னர், கே.எல்.ராகுலுடன் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் ஜோடி சேர்ந்தார். நிதானமாக விளையாடி வந்த கே.எல்.ராகுல் 27 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரானும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட் வீழ்ந்த நிலையில், பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இந்த சீசனில் தொடர்ந்து அசத்தாலாக விளையாடி வந்த கெயிலும் தாஹிர் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அதனால், பஞ்சாப் அணி 72 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்தது.
16 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. மந்தீப் சிங்கும், ஹூடாவும் சரிவில் இருந்த அணியை மீட்க போராடினர். சற்று நேரம் தாக்குப்பிடித்த மந்தீப் சிங் 14 (15) ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நீஷம் 2 ரன்னில் நடையைக்கட்டினார். 18 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது.
Loading More post
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
தமிழகத்தில் பேருந்து வேலைநிறுத்தம்: மிகக்குறைவான பேருந்துகள் இயக்கம் -பயணிகள் அவதி
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!