கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் உடன் தனது கடைசிப் போட்டியில் சென்னை மோதுகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெறாமல் சென்னை அணி ஏற்கெனவே வெளியேறிவிட்ட நிலையில் கடைசிப் போட்டியில் வெற்றிப்பெறுமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
கடந்த இரு ஆட்டங்களில் பெங்களூரு, கொல்கத்தாவுக்கு எதிராக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இளம் வீரர்களின் பங்களிப்பினால் சென்னை அபார வெற்றிப்பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஏற்கெனவே நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப்பை 10 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடியது சென்னை அணி. இந்தப் போட்டியிலும் பஞ்சாபை வெற்றிப்பெற்றால் அந்த அணியின் பிளே ஆஃப் கனவு நிறைவேறாமல் போகும்.
பஞ்சாப் அணி 13 ஆட்டங்களில் 6-ல் வெற்றி, 7-ல் தோல்வியுடன் 12 புள்ளிகளை பெற்றிருக்கிறது. பிளே-ஆப் வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். 13 ஆட்டங்களில் 5 வெற்றி, 8 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணி இன்றையப் போட்டியில் வெற்றிப் பெற்றால் ஓர் இடம் முன்னேறி 7 ஆம் இடத்துக்கு செல்லும்.
இந்நிலையில், அபுதாபி மைதானத்தில் இன்று நடைபெறும் இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
Loading More post
சென்னை: புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை.. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!
4 மீனவர்கள் உயிரிழப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 11ம் கட்ட பேச்சுவார்த்தை: உடன்பாடு எட்டப்படுமா?
கர்நாடகா: சக்திவாய்ந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழப்பு!
சசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!