இனி மழைக்காலம்... கார் வைத்திருப்பவர்களே கவனமாக இருங்கள்.. சில டிப்ஸ்..!  

Monsoon-car-care-tips

மழைக்காலம் தொடங்கிவிட்டது. அதனை எதிர்கொள்ள சிலவற்றை நாம் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். உணவு வகைகள், உடுத்தும் துணி என அனைத்திலும் மாற்றம் ஏற்படும். அப்படி நம்முடன் இருக்கும் காரையும் மழைக்காலத்தில் கொஞ்சம் கூடுதலாக கவனித்துக்கொள்ள வேண்டும். வரும் மழைக்காலத்தில் காரை எப்படியெல்லாம் பராமரிக்கலாம்? எதிலெல்லாம் கவனம் செலுத்த வேண்டும்?


Advertisement


1.வைபர்ஸ் மற்றும் வாஷர்ஸ்

மழைக்காலம் என்றாலே காரில் அதிகம் பயன்படும் ஒரு பாகம் என்றால் அது கண்ணாடி வைபர் தான். வாகனம் ஓட்டுபவருக்கு சாலையை தெளிவாக காட்ட வேண்டும் என்றால் கண்ணாடி தெளிவாக இருக்க வேண்டும். அதற்கு வைபர் சரியாக இருக்க வேண்டும். அடைமழையில் வைபர் இல்லை என்றால் காரினை நகர்த்தக் கூட முடியாது. சாலைகளை சரியாக பார்க்க முடியாமல் வண்டி ஓட்டுவது ஆபத்து. அதனால் வைபர் சரியாக
இயங்குகிறதா? வைபரில் உள்ள ரப்பர் சீராகவும், சமமாகவும் கண்ணாடியை சுத்தம் செய்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். சமமான ரப்பர் பட்டை இல்லை என்றால் அது கண்ணாடிக்கும் சேதத்தை உண்டாக்கும். வைபரில் ஏதேனும் பிரச்னை என்றால் உடனடியாக அதனை மாற்றிக்கொள்ள வேண்டும். வைபரில் சிக்கனம் என்பது கூடவேகூடாது.


Advertisement

image

2.பிரேக் மற்றும் முகப்பு விளக்குகள்
ஒரு காருக்கு பிரேக் என்பது எல்லா காலத்திலும் முக்கியம் தான். அதிலும் மழைக்காலத்தில் கூடுதல் கவனம் தேவை. கோடையில் சாலைகள்
வறண்டு கிடப்பதால் சராசரியாக பிரேக் பிடித்தாலே உங்கள் கார் நின்றுவிடும். அதுவே மழைக்காலம் என்றால் வழுவழுப்பான சாலையாக இருக்கும். அந்த நேரத்தில் வழக்கமான உங்கள் பிரேக் சொதப்பக்கூடும். அதனால் அதற்கு ஏற்ப உங்கள் காரின் பிரேக்கை சரிசெய்து கொள்ளவேண்டும். அதுபோல முகப்பு விளக்குகளையும் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். மழைக்கால இரவுகளில் வாகனம் ஓட்டுவதற்கு முகப்பு விளக்கு என்பது மிக மிக முக்கியம். அரைகுறை வெளிச்சம், ஒருபக்க விளக்கு என்ற கதையெல்லாம் மழைக்காலத்தில் ஆபத்தை உண்டாக்கும்.

3.பெயிண்ட் பராமரிப்பு


Advertisement

கார் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்றால் அதன் வெளிப்புறத்தை நாம் சரியாக பராமரிக்க வேண்டும். காரின் வெளிப்புறத்தில் பெயிண்ட் உரிதல், ஏதேனும் விபத்து ஏற்பட்ட கோடுகளால் பெயிண்ட் போயிருத்தல் இப்படி ஏதேனும் பிரச்னை என்றால் அதனையும் உடனடியாக
சரிசெய்துகொள்ள வேண்டும். பெயிண்ட் இல்லாத இடத்தில் மழை நீர் பட்டு அந்த இடம் துருபிடிக்க வாய்ப்புள்ளது. பெயிண்ட் பராமரிப்பு இல்லாமல்
இருந்தால் காரின் தோற்றம் படு மோசமாக மாறிவிடும்.

image

4.டயர்:

பிரேக்கை போலவே டயரும் மிக மிக முக்கியமான ஒன்று. மழைக்காலத்தில் வழுவழுப்பான சாலையுடன் நேரடி தொடர்பில் இருப்பது காரின்
டயர்கள் தான். பிரேக் சரியாக இருந்தாலும் டயரில் சரியான சொரசொரப்பு பட்டைகள் இருந்தால்தான் பிரேக் பிடித்த இடத்திலேயே வண்டி நிற்கும்.
வழுவழுப்பான டயர்கள் மழைக்காலத்தில் வாகனத்தை ஸ்கிட் செய்யுமே தவிர நிறுத்தாது. எனவே பட்டைகள் தேய்ந்த டயர்கள் என்றுமே
ஆபத்துதான். அதுவும் மழைக்காலத்தில் அதிக ஆபத்து.

image

5.உட்புற பராமரிப்பு

வாகனத்தில் வெளிப்புறத்தை போலவே காரின் உள்புறத்தையும் மழைக்காலத்தில் கூடுதலாக கவனிக்க வேண்டும். ஈரத்துடன் வந்து அமர்வது,
ஈரக்கால்களுடன் காருக்குள் ஏறுவது போன்ற காரணத்தினால் கார் ஈரமாகி துர்நாற்றம் வீச வாய்ப்புள்ளது. அதனால் காரின் மேட்களை சுத்தமாக
வைத்துக்கொள்ள வேண்டும். மழைக்காலமாகவே இருந்தாலும் அவ்வப்போது வெயில் அடிக்காமல் இருக்காது. அதுபோன்ற நேரங்களில் காரின்
கதவுகளை திறந்துவைத்தல், மேட்களை சுத்தம் செய்து வெயிலில் காயவைத்தல் போன்ற சின்ன சின்ன விஷயங்களை செய்யலாம். காருக்கே
உண்டான பிரத்யேகமான தரமான வாசனை திரவியங்களை காருக்குள் பயன்படுத்தலாம். அதுபோல சீட் கவர்களையும் அடிக்கடி சுத்தம் செய்து
வைத்துக்கொள்ள வேண்டும்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement