விவசாய பம்பு செட்டுகளுக்கான மின் இணைப்புக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை மேலும் 2 மாதங்களுக்கு தமிழக அரசு நீட்டிக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “விவசாய பம்பு செட்டுகளுக்கான மின் இணைப்புகளுக்கு தடையில்லா சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல்களை தமிழக அரசு சரிசெய்து கொடுக்காத நிலையில்,அதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியும் இன்றுடன் முடிவடைந்துவிட்டது. இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகளால் மின்மோட்டாருக்கு விண்ணப்பிக்க இயலவில்லை.
நீர்நிலைகளில் இருந்து 200 மீட்டர் தூரம் இருந்தால்தான் விவசாய பம்பு செட்டுக்கான தடையில்லா சான்றிதழ் பெறமுடியும் என்ற விதிமுறையை 50 மீட்டராக குறைப்பதோடு, இதற்காக வரையறுக்கப்பட்டுள்ள நீர்நிலைகள் பட்டியலில் இருந்து வடிகால்களை அகற்ற வேண்டும். விவசாய பம்பு செட்டுகளுக்கான மின் இணைப்புக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை மேலும் 2 மாதங்களுக்கு தமிழக அரசு நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்
Loading More post
”ரூ12,400 கோடிக்கு புதிய திட்டங்கள்” - பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் மாறி மாறி புகழாரம்!
’8 ரன் கொடுத்து 5 விக்கெட்’ மிரட்டிய ஜோ ரூட் - 145 ரன்னில் சுருண்ட இந்திய அணி!
கோவை: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி பிரதமர் மோடி மரியாதை
சீமானுக்கு டாடா... ‘தமிழ் தேசிய புலிகள்’ புதிய கட்சியை தொடங்கினார் மன்சூர் அலிகான்!
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?