சூரரைப் போற்று மலையாள டப்பிங்: சூர்யாவுக்கு குரல் கொடுத்த பிரபல தமிழ் நடிகர்!

Soorarai-Pottru-released-in-Malayalam--Famous-actor-who-dubbed-Surya

மலையாளம் மற்றும் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகும் சூரரைப் போற்று படத்திற்கு மலையாள பதிப்பில்  சூர்யாவுக்கு நடிகர் நரேன் குரல் கொடுத்திருக்கிறார்.


Advertisement

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் ’சூரரைப் போற்று’ அக்டோபர் 30 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பதாக அறிவித்தார் நடிகர் சூர்யா. ஆனால், எதிர்பார்த்தப்படி இந்திய விமானத்துறையின் அனுமதி உடனடியாக கிடைக்காமல் தாமதமாக கிடைத்ததால் படத்தினை தீபாவளியொட்டி நவம்பர் 12 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

 image


Advertisement

இந்நிலையில், இன்று ’சூரரைப் போற்று’ படத்தின் மலையாள மற்றும் கன்னட டப்பிங் ட்ரைலரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

image

அதனைத்தொடர்ந்து, நடிகர் நரேன் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், மலையாளத்தில் சூர்யாவுக்கு டப்பிங் கொடுத்திருப்பதை மலையாள மொழியிலேயே தெரிவித்துள்ளார். நடிகர் நரேன் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் பிரபலமானார்.


Advertisement

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement