இயக்குநரான நடிகர் மனோஜ்: படத்தின் அறிவிப்பு வெளியீடு!

Actor-Manoj-becomes-director

பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் முதன்முதலாக இயக்கவிருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது!


Advertisement

கடந்த 1977 ஆம் ஆண்டு வெளியான ‘பதினாறு வயதினிலே” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பாரதிராஜா. முதல் மரியாதை, கடலோர கவிதைகள்,  வேதம் புதிது, கிழக்கு சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட  தமிழக மக்களால் எப்போதும் போற்றப்படும் சிறந்த படங்களை இயக்கியுள்ளார். இவரது படங்கள் ஆறு முறை தேசிய விருதை வென்றுள்ளது. ’இயக்குநர் இமயம்’ என்று பாராட்டப்படும் பாரதிராஜா தனது மகன் மனோஜை தன்னைப்போலவே இயக்குநராக்காமல் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான ‘தாஜ்மஹால்’ படத்தின் மூலம் நடிகராக்கினார்.  

image


Advertisement

சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், அன்னக்கொடி உள்ளிட்ட படங்களில் நடித்த மனோஜால் எதிர்பார்த்தப்படி முன்னனி நடிகராக முடியாததால், மீண்டும் அப்பாவின் பாதைக்கு திரும்பினார். நடிக்க வருவதற்கு முன்பே ’பம்பாய்’ படத்தில் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார் மனோஜ். நடிகரான பின் ஷங்கரின் ‘எந்திரன்’ படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

image

 


Advertisement

எப்போது படம் இயக்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று மனோஜின் படத்தை தயாரிக்கவிருக்கும் LIBRA Production இன்று தனது ட்விட்டர் பக்கத்தில்,

‘பாரதிராஜாவின் ஆசீர்வாதங்களுடன் அறிமுக இயக்குநர் மனோஜ் இயக்கும் புதிய படம் துவங்கவிருக்கிறது. இப்படத்தின், நடிகர் நடிகைகளின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். படம் அடுத்த ஆண்டு வெளியாகும்’ என்று அறிவித்திருக்கிறது.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement