ஹைதராபாத், நாச்சாரம் பகுதியில் குழந்தை இல்லாத தம்பதியினருக்கு ரூபாய் 1 லட்சத்திற்கு விற்கப்பட்ட புதிதாகப் பிறந்த ஆண்குழந்தையை ஹைதராபாத் போலீசார் மீட்டனர்.
விற்கப்பட்ட குழந்தையின் தாய் மீனாவுக்கு, முன்னர் பிறந்த இரண்டு பெண் குழந்தைகள் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டது. மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்தால் வளர்ப்பதில் ஏற்படும் செலவுகள் குறித்து பயந்து மீனா மற்றும் அவரது கணவர் ராஜேஸ்வர் ஆகியோர் கர்ப்பத்தின் நான்காவது மாதத்திலேயே குழந்தை பிறந்தவுடன் அதனை விற்க முடிவு செய்தனர். இதற்காக ஜி.எச்.மருத்துவமனை தொழிலாளி ஜானகி, மீனா மற்றும் ராஜேஸ்வரரை அணுகி குழந்தைக்காக ரூ .1 லட்சம் வழங்கினார். மீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்த பிறகு ஆரம்ப ஒப்பந்தத்தின்படி அவர்களிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
பின்னர், ராஜேஷ்வரும் மீனாவும் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டு தங்கள் குழந்தையைத் திரும்பப் பெற விரும்பினர். இதற்காக அவர்கள் ஜானகியை அணுகியபோது, அவர் இப்பெற்றோரை அச்சுறுத்தினார். இதன்பின்னர் மீனா மற்றும் ராஜேஸ்வர் ஆகியோர் குழந்தையை வாங்கிய குழந்தை இல்லாத தம்பதியினர் மீதும், மத்தியஸ்தராக இருந்த ஜானகி மீதும் நடவடிக்கை எடுக்க ராச்சகொண்டா போலீஸை அணுகினர்.
இதன்பின்னர் நாச்சரத்தில் விற்கப்பட்ட புதிதாகப் பிறந்த ஆண்குழந்தையை போலீசார் மீட்டனர். குழந்தையை வாங்கிய தம்பதியர் மற்றும் குழந்தையை விற்க உதவிய மத்தியஸ்தர் மீது காவல்துறை வழக்குகள் பதிவு செய்து, மேலதிக பராமரிப்புக்காக குழந்தையை குழந்தைபராமரிப்பு இல்லத்தில் ஒப்படைத்துள்ளனர்.
Loading More post
“பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை”-ஐஐடி மாணவி புகார்
ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான திரையிடலில் 'சூரரைப் போற்று'
மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையே டெல்லி வன்முறைக்கு காரணம்: மம்தா பானர்ஜி
கையில் வாள்... குதிரை சவாரி... டிராக்டர் பேரணிக்கு காவலாக வந்த 'நிஹாங்' சீக்கியர்கள் யார்?
4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி