விஷால் ஜோடியாக ’டப்ஸ்மாஷ்’ புகழ் மிர்னாலினி ரவி!

Mirmalini-Ravi-of-Tapmash-fame-with-Vishal-

விஷால், ஆர்யா இணைந்து நடித்துவரும் புதிய படத்தில் டப்ஸ்மாஷ் புகழ் மிர்னாலினி ரவி நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.


Advertisement

கடந்த ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான மிர்னாலினி ரவி, கடைசியாக சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘சாம்பியன்’ படத்தில் நடித்திருந்தார்.

image


Advertisement

அதனைத்தொடர்ந்து, சசிகுமாருக்கு ஜோடியாக ‘எம்.ஜி.ஆர்’ மகன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், விஷால் ஆர்யா படத்தில் இணைந்து நடிப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

image

’அவன், இவன்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத இப்படம், விஷாலின் 30 வது படமாகவும் ஆர்யாவின் 32 வது படமாகவும் வெளியாகவிருக்கிறது. இயக்குநர் பாலா இயக்கத்தில் ‘அவன் இவன்’ திரைப்படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில், விஷால் பெண் கெட்டப்பில் ஒரு பாடலில் நடனமாடி நடிப்பில் மிரட்டியிருப்பார். விஷால், ஆர்யா இருவரும் போட்டிக்கொண்டு சிறந்த நடிப்பை வழங்கினார்கள்.


Advertisement

image

இருவருமே நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், 9 வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளனர். விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார்.

image

படத்தின் பிரம்மாண்ட ஓப்பனிங் சமீபத்தில்தான் படமாக்கினார்கள். இந்நிலையில், தற்போது, மிர்னாலினி ரவியின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement