உடல் எடை குறைய சிம்பு கடினமாக உழைத்தார்: தங்கை இலக்கியா பெருமிதம்!..

simbu-sister-elakkiya-tweet-about-his-brother-weight-loss

உடல் எடையைக் குறைத்து அதே ‘யங் சூப்பர் ஸ்டார்’ என்று சொல்லுமளவிற்கு உருமாற்றம் அடைந்துள்ள சிம்புவை அவரது தங்கை இலக்கியா பாராட்டியுள்ளார்.


Advertisement

 

 

நடிகர் சிம்பு கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திலிருந்தே உடல் பருமனாகி காணப்பட்டர். கடந்த ஆண்டு வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் சிம்புவின் உடல் எடையைப் பார்த்துவிட்டு பலரும் விமர்சித்திருந்தார்கள்.

image


Advertisement

இந்நிலையில், 101 கிலோ எடையில் இருந்த சிம்பு கொரோனா ஊரடங்கில் உடல் எடையை 71 கிலோவாக குறைத்து அனைவரையும் ’ஆஹா’ச்சர்யப்படுத்தியிருக்கிறார். சிம்புவா இது? என்று அவரது ரசிகர்களும் திரைத்துறையினரும் பாராட்டி வருகிறார்கள்.

image

 

இந்நிலையில், சிம்புவை அவரது தங்கை இலக்கியா தனது ட்விட்டர் பக்கத்தில் “சிம்பு இந்த மாற்றத்திற்காக நிறையவே உழைத்தார். இந்த மாற்றம் அவரது உடல் எடையை குறப்பதற்காக மட்டுமல்ல. அவரது உண்மையான சுய நோகத்தையும் குறிக்கோள்களையும் அறிந்து கொள்வதற்காகவும்தான். இந்த பயணத்தில் அவருடன் நான் சில நாட்கள் இருந்தேன். தனது குறிக்கோள்களை நோக்கி கடினமாக உழைப்பதை நான் கண்டேன்” என்று பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement