உதகை அருகே தாலி கட்டும் நேரத்தில் மணமகள் திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மட்டகண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கும் கோத்தகிரி அருகே உள்ள தூனேரி கிராமத்தை சேர்ந்த பிரியதர்சினி என்ற பெண்ணிற்கும் எளிமையான முறையில் திருமணம் நடத்த பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் அவர்களின் சம்பிரதாயப்படி, மணமேடையில் மணமகன், மணமகளிடம் தாலி கட்டுவதற்கு முன் திருமணம் செய்து கொள்ள சம்மதமா எனக் கேட்க வேண்டும். மணப்பெண் சம்மதம் என்று சொன்னவுடன் மட்டுமே மணமகன் தாலியை கட்ட முடியும்.
அதன்படி மணமகன் மணப்பெண்ணிடம் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா? என இருமுறை கேட்கும்பொழுது மௌனமாக இருந்த மணப்பெண், மூன்றாவது முறை கேட்கும்போது எனக்கு சம்மதமில்லை எனக்கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தியது பரபரப்பை கிளப்பியது.
இதனை தொடர்ந்து “என்னை திருமணம் செய்து கொள்ள என் காதலன் வருகிறார். ஒரு மணி நேரம் பொறுங்கள். அவர் எனக்காக அவரது திருமண பந்தத்தை முறித்துக் கொண்டவர். அவரது குழந்தைகளை நான் தான் பார்த்துகொள்ள வேண்டும். உங்களை திருமணம் செய்து கொண்டால் அவருக்கு துரோகம் செய்தது போல் ஆகிவிடும். எனவே எனக்கு இந்த திருமணம் வேண்டாம்” எனக் கூறி அங்கிருந்து செல்ல முற்பட்டார்.
அப்போது அந்தப் பெண்ணின் பெற்றோர் அவரை கண்டித்து தாக்கினர். ஆனால் அச்சமின்றி அந்த மணப்பெண் மண மேடையில் இருந்து சென்றார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
Loading More post
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
ஜெயலலிதா நினைவு இல்லம் ஜன.28ல் திறப்பு - தமிழக அரசு
9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
டிராக்டர் பேரணி: ட்விட்டர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி - உளவுத்துறை
சூடு பிடிக்கும் அரசியல்களம்; அடுத்தக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?