[X] Close >

பிரதமர் பெயரில் அறக்கட்டளை.. லெட்டர் பேடில் மோடியின் புகைப்படம்.. உ.பி. சம்பவம்.!

10-booked-for-registering-fake-trust-in-PM-name-4-taken-into-custody

உ.பி.யில் பிரதமர் மோடியின் பெயரில் போலியான அறக்கட்டளை நடத்தி வந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

வாரணாசியில் உள்ள கபீர் நகர் பகுதியில் வசிக்கும் அஜய் பாண்டே என்பவர் ‘ஆதர்ஷ் நரேந்திர தாமோதர் தாஸ் மோடி ஜங்கல்யங்கரி அறக்கட்டளை’ என்ற பெயரில் கடந்த ஜூலை 14-ம் தேதி அன்று அறக்கட்டளை ஒன்றை பதிவு செய்தார்.

அறக்கட்டளையின் லெட்டர் பேடில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பயன்படுத்தி, பிரதமரின் அதிகாரப்பூர்வ அறக்கட்டளை போன்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளனர். அதோடு இந்தப் பெயரை பயன்படுத்தி மோசடி மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக வாரணாசி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, இந்த அறக்கட்டளையை கண்காணிக்கத் தொடங்கினர்.


Advertisement

இந்நிலையில் ஒரு பல்கலைக்கழகத்திற்கு நிதி நன்கொடை வழங்குமாறு மக்கள் பிரதிநிதிகள் சிலரை அணுகியதை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து பிரதமரின் பெயரில் அறக்கட்டளை பதிவு செய்த அஜய் பாண்டே உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் அஜய் பாண்டே உள்பட அறக்கட்டளையின் உறுப்பினர்கள் 10 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close