தாம்பரம் அருகே கல்லூரி மாணவர் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு ராம்ஜிநகர், நான்காவது தெருவைச் சேர்ந்தவர் அருள். இவரது மகன் அபிஷேக் என்கிற பாபு(20). இவர் சென்னை பல்லாவரம் வேல்ஸ் காலேஜில் பி ஏ எக்கனாமிக்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், அபிஷேக் நேற்று சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தர்காஸ் கிராமத்தில் விண்ணேற்பு மாதா ஆலய கலையரங்கத்தில் நடந்த திருமண வரவேற்பு விழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது 5 கொண்ட மர்ம கும்பல் அபிஷேக்கை வழிமறித்து சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர்.
தகவலறிந்து வந்த சோமங்கலம் காவல் நிலைய போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அபிஷேக் அண்ணன் ஜோசப் ராஜ் என்பவர் ஏற்கனவே கொலை முயற்சி வழக்கில் சிறை கைதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
தமிழக பேருந்துகளை சிறைபிடித்த ஆந்திர அதிகாரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
"இது மலிவான செயல் பெய்ன்..." - அஸ்வின் விவகாரத்தில் கொதித்த கிரேக் சேப்பல்!
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு