ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 52-ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூர் - ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன.
ஷார்ஜாவில் நடைபெறும் இந்த ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியமான ஆட்டமாகும். இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்களூர் அணி, 7 வெற்றிகளைப் பெற்று 14 புள்ளிகளுடன் பட்டியலில் 2-ஆவது இடத்தில் உள்ளது. அந்த அணி ஹைதராபாத்தை வெல்லும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். அதேநேரத்தில் ஹைதராபாத் அணிக்கு இது வாழ்வா, சாவா ஆட்டமாகும். அந்த அணி இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகளைப் பெற்று 10 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தில் உள்ளது.
அந்த அணி பெங்களூரை வீழ்த்தினால் மட்டுமே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைக்க முடியும். மாறாக தோற்கும்பட்சத்தில் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற நேரிடும். விராட் கோலி தலைமையிலான பெங்களூா் அணி வலுவான அணியாக இருந்தபோதிலும், கடைசியாக விளையாடிய இரு ஆட்டங்களில் முறையே சென்னை, மும்பை அணிகளிடம் தோல்வி கண்டது. எனவே, இந்த ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற போராடும். அந்த அணியின் பேட்டிங்கைப் பொருத்தவரையில் தேவ்தத் படிக்கல், கேப்டன் விராட் கோலி, ஏ.பி.டிவில்லியா்ஸ் ஆகியோர் நல்ல பார்மில் இருக்கின்றனர்.
மிடில் ஆா்டரில் ஷிவம் துபே, குருகீரத் சிங், கிறிஸ் மோரீஸ் ஆகியோா் சிறப்பாக ஆடும்பட்சத்தில் சிறிய மைதானமான ஷார்ஜாவில் பெங்களூர் அணி வலுவான ஸ்கோரை குவிக்க முடியும். வேகப்பந்து வீச்சில் கிறிஸ் மோரீஸ் பலம் சோ்க்கிறார்கள். சுழற்பந்து வீச்சில் சஹால் பெங்களூர் அணிக்கு பலம் சோ்க்கிறார்கள். ஹைதராபாத் அணியில் கேப்டன் டேவிட் வார்னர் தொடா்ந்து சிறப்பாக ஆடி வருகிறார்.
மிடில் ஆா்டரில் மணீஷ் பாண்டே, கேன் வில்லியம்சன் ஆகியோரை நம்பியுள்ளது ஹைதராபாத்.வேகப்பந்து வீச்சில் சந்தீப் சா்மா, ஜேசன் ஹோல்டர், டி.நடராஜன் ஆகியோரை நம்பியுள்ளது ஹைதராபாத். சுழற்பந்து வீச்சில் ரஷீத் கான், சபேஸ் நதீம் கூட்டணி ஹைதராபாத்துக்கு பலம் சேர்க்கிறது. ரஷீத் கான், பெங்களூர் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை இவ்விரு அணிகளும் இதுவரை 15 ஆட்டங்களில் நேருக்கு நோ் மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா 7 வெற்றிகளைப் பெற்றுள்ளன. ஓர் ஆட்டம் ‘டை’யில் முடிந்துள்ளது.
Loading More post
“பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை”-ஐஐடி மாணவி புகார்
ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான திரையிடலில் 'சூரரைப் போற்று'
மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையே டெல்லி வன்முறைக்கு காரணம்: மம்தா பானர்ஜி
கையில் வாள்... குதிரை சவாரி... டிராக்டர் பேரணிக்கு காவலாக வந்த 'நிஹாங்' சீக்கியர்கள் யார்?
4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி