நாளுக்கு நாள் பரபரப்பை எகிற வைத்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு பலப்பரீட்சைகள் நடைபெறவுள்ளன.
துபாயில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஸ்ரேயாஸ் ஐய்யர் தலைமையிலான டெல்லி அணி 12 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. கெய்ரன் பொல்லார்டு தலைமையிலான மும்பை அணி விளையாடிய 12 போட்டிகளில் 8 வெற்றிகளைப் பெற்றிருக்கின்றது.
இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் டெல்லி அணி 12 போட்டிகளிலும், மும்பை அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஷார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது போட்டியில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி 12 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது இவ்விரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
அவற்றில் பெங்களூரு அணி 7 போட்டிகளிலும், ஹைதராபாத் அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்