தீபாவளி நெருங்கிவிட்டது. ஆனாலும் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. தமிழக அரசின் முடிவுக்காக தமிழ் சினிமா உலகமே காத்திருக்கிறது. இந்த நிலையில், தியேட்டருக்குச் சென்று படங்கள் பார்த்த அனுபவங்களை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார் நடிகர் சிபிராஜ்.
"அப்பா நடித்த பெரும்பாலான படங்களை தியேட்டர்களுக்குச் சென்றுதான் பார்த்திருக்கிறேன். உதயம் தியேட்டரில் வால்டர் வெற்றிவேல் பார்த்த ஞாபகம் இருக்கிறது. அந்தப் படம் ஹவுஸ்புல்லாக 50 நாட்கள் ஓடியது. அப்போது தியேட்டர்களில் அட்வான்ஸ் ரிசர்வேஷனைப் பொருத்தே நடிகர்களின் புகழ் அளவிடப்பட்டது. அமைதிப்படை, வில்லாதி வில்லன் படங்களின் ரிசர்வேஷன் இரு வாரங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. அதுவொரு சிறந்த அனுபவம்.
சமூகக்காடுகளால் பசுமையான பூநெய்த்தாங்கல் கிராமம்: ஓய்வுபெற்ற நல்லாசிரியரின் அற்புத முயற்சி!
அமைதிப்படையில் ஹீரோ சத்யராஜைவிட வில்லன் சத்யராஜ் அதிக கைத்தட்டல்களைப் பெற்றார். அதேபோல அவ்வை சண்முகி படத்தை அபிராமி தியேட்டரில் ரசித்தேன். படத்தின் பெரும்பாலான காட்சிகளை கைதட்டி அனைவரும் ரசித்தார்கள். இன்னொரு அனுபவம், அலங்கார் தியேட்டரில் டெர்மினேட்டர் 2 படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன். அதில் அர்னால்டு பேசும் வசனத்தை மறக்கமுடியாது: ஐ வில் பி பேக்...
நான் படப்பிடிப்புத்தளம் தேடுவதற்காக கோயம்புத்தூர் சென்றிருந்தபோது, விஜய்யின் தலைவா படம் வெளியாகி இருந்தது. அப்போது அப்படம் தமிழ்நாட்டில் ரீலிசாகவில்லை. அதற்காக பாலக்காடு போய் முதல் நாள் முதல் காட்சி பார்த்து வந்ததை மறக்கமுடியாது. நான் நடித்த நாய்கள் ஜாக்கிரதை படத்தை சத்யம் தியேட்டரில் பார்த்தது உணர்பூர்வமானது. சிறிய திரையில் வெளியாகி சில நாட்களுக்குப் பிறகு அந்தப் படம் பெரிய திரைக்கு மாற்றப்பட்டது.
மீண்டும் தியேட்டருக்குச் சென்று பாடம் பார்க்கும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஹோட்டல்களுக்கும் மற்ற இடங்களுக்கும் மக்கள் செல்லத் தொடங்கிவிட்டார்கள். புதுச்சேரியில் மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டு கணிசமான மக்கள் கூட்டம் வருகிறது. சமூக இடைவெளியுடன் முன் எச்சரிக்கைகளுடன் படம் பார்க்க ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால், இயல்பு நிலை திரும்பிவிடும் " என்று உற்சாகத்துடன் பேசியுள்ளார் சிபிராஜ்
ரஜினி சார் உங்கள் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் விட வேறு எதுவும் முக்கியமில்லை: குஷ்பு
Loading More post
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி