கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே டெம்போ மீது சொகுசு கார் மோதிய விபத்தில் 4 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ஆலன் ஜோஸ். இவர் தனது குடும்பத்தினருடன் சொகுசு காரில் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு சென்றுவிட்டு நேற்று மாலையில் அங்கிருந்து புறப்பட்டு வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது விடியற்காலை நாகர்கோவில் அருகே உள்ள தோட்டியோடு பகுதியை கடக்கும்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த டெம்போ மீது சொகுசு கார் மோதியது. இந்த விபத்தில் ஆலன் ஜோசின் 4 மாத குழந்தை ஆட்லின் ரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், சொகுசு காரை ஒட்டிய ஓட்டுநர் உட்பட 9 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சொகுசு காரை ஓட்டிவந்த புதுக்கடை பகுதியை சேர்ந்த ஆபிரகாம் ஜெபசிங் மீது இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரதமர் மோடி..
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
திமுக - காங்கிரஸ் இடையே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் - கே.எஸ்.அழகிரி
9, 10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி - தமிழக அரசு
தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு 60 ஆக உயர்வு
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!