அடுத்த ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக தோனி மீண்டும் ஃபார்முக்கு திரும்ப சங்ககாரா ஆலோசனை வழங்கியுள்ளார்.
எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருடம் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. ஐபிஎல் வரலாற்றில் சென்னை சென்னை அணி ஒரு வருடம் கூட பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியது இல்லை. 8 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மூன்று முறை கோப்பையை கைப்பற்றியது.
அணியின் கேப்டன் தோனி ஃபார்மில் இல்லாததே இந்த சீசனில் சி.எஸ்.கே.வின் சறுக்கலுக்கு காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா தோனிக்கு சில ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அவர் கூறுகையில்,
''ஐபிஎல் தொடரில் ஒரு சீசனுக்கும் அடுத்த சீசனுக்கும் நீண்ட இடைவெளி உள்ளது. இப்படி நீண்ட காலத்திற்கு விளையாடாமல் இருப்பது நல்லதல்ல. தோனி சில கிரிக்கெட் தொடரில் விளையாடி தோனி தனது ஆட்டத்தை மீட்டெடுக்க வேண்டும். தோனி தொடர்ந்து விளையாடுவதற்கு விருப்பப்படுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது..
ஒரு வீரர் ஃபார்மில் இல்லாததும் ஃபார்முக்கு திரும்புவதும் சகஜமான ஒன்றுதான். எல்லா வீரர்களும் இந்த சூழலை எதிர்கொள்வார்கள். ஆனால் ஒரு சில வீரர்களின் செய்திதான் பெரிதாக பேசப்படும். தோனி ஐபிஎல் போன்ற தலைசிறந்த கிரிக்கெட் தொடர்களில் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’’ என்றார்
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவுக்கு கருணாஸ் ஆதரவு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி
அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்: ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல்?
"வாக்குகள் சிதறாது; உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடக்கம்" - டிடிவி தினகரன்
ஒன்றிரெண்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட சட்டப்பேரவையில் நுழைந்துவிடக் கூடாது: மார்க்சிஸ்ட்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!