"எங்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கு"-டேவிட் ஹசி !

KKR-still-breathing-in-the-competition-says-David-Hussey

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற எங்களுக்கு இன்னும் வாய்ப்புகள் இருக்கிறது என்று கொல்கத்தா அணியின் ஆலோசகர் டேவிட் ஹசி தெரிவித்துள்ளார்.


Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் நடப்பு ஐபிஎல் சீசனின் 49வது லீக் ஆட்டத்தில் நேற்று விளையாடின. அதில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இதனையடுத்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பு கொல்கத்தா அணிக்கு குறைந்துள்ளது. இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெறும் வாய்ப்பு மற்ற அணிகளுக்கும் அதிகரித்துள்ளது.

image


Advertisement

இது குறித்து கொல்கத்தா அணியின் ஆலோசகர் டேவிட் ஹசி "இதுபோன்ற முக்கியமான போட்டிகளில் நாங்கள் தோல்வி அடைந்திருக்கிறோம். ஆனால் எங்களுக்கு இன்னும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெறும் வாய்ப்பு இருக்கிறது. இன்னும் சில நாள்களில் நாங்கள் எங்களை சார்ஜ் செய்துக்கொண்டு பழைய வெற்றிப்பாதைக்கு திரும்புவோம். ஐபிஎல்லின் வேறு அணிகளின் வெற்றியும் தோல்வியும் எங்களது வாய்ப்புகளை பிரகாசமாக்கும்" என்றார்.

image

மேலும் "ஒவ்வொரு தோல்வியும் கடினமானுதான். ஆனால் சென்னையை பாராட்ட வேண்டும். அவர்கள் நேற்றையப் போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடினார்கள். கிரிக்கெட்டின் அனைத்திலும் அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். மிக முக்கியமாக ராயுடு, ருதுராஜ் ஆட்டம் வெறித்தனமாக இருந்தது. எங்கள் அணியிவ் நிதிஷ் ரானா இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வருவது மகிழ்ச்சி" என்றார் டேவிட் ஹசி.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement