கொல்கத்தா அணியுடனான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றிப் பெற்றவுடன் தோனியிடம் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி நீண்ட நேரம் உரையாடிக் கொண்டு இருந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் நடப்பு ஐபிஎல் சீசனின் 49வது லீக் ஆட்டத்தில் நேற்று விளையாடின.173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் நல்ல தொடக்கத்தை கொடுத்தார். வாட்சன் மற்றும் ராயுடுவுடன் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தார் அவர்.
வாட்சனும், ராயுடுவும் அவுட்டானதை தொடர்ந்து சென்னையின் கேப்டன் தோனி கிரீஸுக்கு வந்தார். நான்கு பந்துகளில் ஒரு ரன் எடுத்த நிலையில் தோனி மீண்டும் வருண் சக்கரவர்த்தியின் சுழலில் க்ளீன் போல்டானார். கொல்கத்தாவும், சென்னையும் விளையாடிய இந்த சீசனின் முதல் லீக் ஆட்டத்திலும் தோனி வருண் சுழலில் போல்டானார்.
From admiring him from the stands at Chepauk, to now...?@chakaravarthy29's fairytale continues!#KKR #Dream11IPL #CSKvKKR pic.twitter.com/rk37xW3OQ7 — KolkataKnightRiders (@KKRiders) October 29, 2020
இந்தப் போட்டியின் இறுதியில் ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தின் காரணமாக சென்னை வெற்றிப்பெற்றது. போட்டி முடிந்த பின்பு வருண் சக்கரவர்த்தி தோனியிடம் வெகு நேரம் பேசிக் கொண்டு இருந்தார். அந்த வீடியோவை கொல்கத்தா அணியின் நிர்வாகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இப்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?