விவசாயிகள் துயர்துடைக்க வா தலைவா வா... ரஜினியை வரவேற்று போஸ்டர்...!

Come-on-leader--the-plight-of-farmers-Poster-welcoming-Rajini

அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம்... விவசாயிகளின் துயர் துடைக்க வா தலைவா வா... உண்மை விவசாய பெருங்குடி மக்கள் மயிலாடுதுறை என மயிலாடுதுறை நகர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


Advertisement

image


நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதிலும் கடந்த சில ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்தின் அறிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் ரஜினி தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்ற எண்ணத்தை ரஜினி ரசிகர்களிடையே ஏற்படுத்தியது.


Advertisement

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரஜினியின் உடல்நிலை குறித்தும், அவரது அரசியல் வருகை குறித்தும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. அதற்கு நேற்று தனது அறிக்கையின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் இன்று காலை மயிலாடுதுறை நகர் பகுதிகளான பேருந்து நிலையம், ரயிலடி, மணிக்கூண்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரஜினியை வரவேற்று நள்ளிரவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் "அரசியல் மாற்றம்.. ஆட்சி மாற்றம்... விவசாயிகளின் துயர் துடைக்க வா தலைவா வா..." உண்மை விவசாய பெருங்குடி மக்கள் மயிலாடுதுறை என குறிப்பிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை நகர்புறங்களில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement