கொல்கத்தா அணியுடனான போட்டியில் சென்னை அணியை வெற்றிப்பெற வைத்த ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ஜடேஜா அதிரடியாக விளையாடினார். 11 பந்துகளில் 31 ரன்களை சேர்த்தார். இதனையடுத்து இருபது ஓவர் முடிவில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வென்றது. போட்டிக்கு பின்பு பேசிய ஜடேஜா "வலைப் பயிற்சியின் போது நான் பந்துகளை நன்றாக அடித்து ஆடுவதை உணர்ந்தேன். அதனை அப்படியே இந்தப் போட்டியில் செய்ய நினைத்தேன். பெரிதும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. ஆனால் பந்தை அடித்து விளையாட வேண்டும் என நினைத்தேன்" என்றார்.
மேலும் "என்னுடைய பலத்துக்கு ஏற்ப விளையாடினேன். எனக்கு பிடித்த ஷாட்டுகளை ஆடுவதற்கு ஏற்றார்போல பந்துகளும் வந்தது. அதனால் சிக்ஸர்களும் பறந்தது, வேலையும் எளிதாக முடிந்தது. இதுபோன்ற கடினமான போட்டிகளில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றித் தேடி தரும்போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்" என்றார் ஜடேஜா.
This one was for the fans. Thank you for the fantastic support. ??#whistlepodu @chennaiipl pic.twitter.com/mMJTgrwnfs — Ravindrasinh jadeja (@imjadeja) October 29, 2020
மேலும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்ட ஜடேஜா "இது எல்லாம் சென்னை ரசிகர்களுக்காக அவர்களின் அன்புக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.
Loading More post
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
25 தொகுதிகளாவது ஒதுக்கினால்தான் கையெழுத்து: தேமுதிக திட்டவட்டம்