(கோப்பு புகைப்படம்)
ஜம்மு காஷ்மீரில் ஆயுதம் ஏந்தி வந்த பயங்கரவாதிகள், பாரதிய ஜனதாவை சேர்ந்த மூன்று தொண்டர்களை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவத்திற்கு பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் குல்ஹாம் மாவட்டத்தில் காஸிகுந்த் பகுதியில் நின்றிருந்த மூன்று பாரதிய ஜனதா தொண்டர்களையும் அங்கு வந்த பயங்கரவாதிகள் சுட்டு விட்டு தப்பிச்சென்றனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், குல்காம் மாவட்டத்தில் மூன்று பாஜக தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டது மிகவும் கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார். கட்சிக்காக அவர்கள் மூவரும் சிறப்பாக பணியாற்றி வந்ததாக குறிப்பிட்ட அவர், உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்தவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமீப நாட்களாக வட மாநிலங்களில் பாஜக தலைவர் அல்லது நிர்வாகிகள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுவதாக அக்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் ஆகஸ்ட் 6-ம் தேதி பாஜகவைச் சேர்ந்த அகமது காண்டே என்பவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கடந்த ஜூலை மாதம் பந்திபோராவின் பாஜக முன்னாள் தலைவர் வாசிம் பாரி மற்றும் அவரது தந்தை, சகோதரர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேருமே உயிரிழந்தனர். ஆகஸ்ட் 9ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் உள்ள மொகிந்த்போரா பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. புத்காம் மாவட்ட பாஜக ஓபிசி பிரிவு தலைவராக இருந்த அப்துல் ஹமீத் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது
Loading More post
அரசு பஸ் டிரைக் தொடரும்: தொழிற்சங்கங்கள்
ராகுலிடம் பொய் சொல்லி ஏமாற்றியவர் நாராயணசாமி -பிரதமர் மோடி
மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரதமர் மோடி..
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
திமுக - காங்கிரஸ் இடையே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் - கே.எஸ்.அழகிரி
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை