பிரான்சில் தேவாலயத்திற்குள் 3 பேர் கொலை !

Three-attacked-and-killed-inside-the-church-in-France

பிரான்சில் தேவாலயத்திற்குள் புகுந்த நபர், 3 பேரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

நைஸ் நகரில் உள்ள தேவாலயத்திற்குள் கத்தியுடன் நுழைந்த நபர், அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். கத்திக் குத்தில், 2 பெண்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே கத்தியால் குத்திய நபர் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார்.

image


Advertisement

கைது நடவடிக்கையின்போது மதரீதியாக முழக்கமிட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தேவாலயத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவர் துனிஷியாவில் பிறந்தவர் என்று பிரான்ஸ் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பிரான்சில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

image

பயங்கரவாதத்திற்கு எதிரான பிரான்சின் நடவடிக்கையில் இந்தியா துணை நிற்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement