ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பாடும் தனுஷ்!

Dhanush-sings-in-AR-Rahmans-music

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் நடிகர் தனுஷ் பாடியிருப்பதை இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.


Advertisement

தனுஷ் நடிக்கும் பாலிவுட் படமான ‘அட்ராங்கி ரே’ படத்தில்  இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க தனுஷுடன் அக்‌ஷய் குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சமீபத்தில்தான் இப்படத்தின் ஷூட்டிங் மதுரையில் நடந்தது.

image


Advertisement

இந்நிலையில், தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு, ஏ.ஆர் ரஹ்மானுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ‘இசைப்புயலுடன் பாடி அரட்டை அடித்தது‘ என்று குறிப்பிட்டு பகிர்ந்ததோடு சாரா அலிகானையும் டேக் செய்துள்ளார்.  இப்புகைபடச்செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

தனுஷ் ஏற்கெனவே ராஞ்சனா, ஷமிதாப் ஆகிய இரண்டு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். அட்ராங்கி ரே அவரது மூன்றாவது பாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.  தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமான ராஞ்சனா படத்திற்கும் ஏ.ஆர் ரஹ்மான் தான் இசையமைத்திருந்தார். 


Advertisement

 

 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement