உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் மே 3ஆம் தேதி காவல்துறை கண்காணிப்பாளர் உதய் ஷங்கர் சிங் தலைமையிலான ஒரு குழு, பாதி எரிந்த நிலையில் ஒரு உடலை கண்டுபிடித்திருக்கின்றனர். ஆனால் அந்த நபர் யார் என்று அடையாளம் காணமுடியவில்லை. எனவே காணாமல் போனதாக யாரேனும் புகார் செய்தால் தெரியப்படுத்தும்படி பக்கத்து காவல்நிலையங்களுக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர்.
இந்நிலையில் மதுராவைச் சேர்ந்த மனோஜ் மிஸ்ரா(42 வயது) என்ற நபர் மே 2ஆம் தேதி காணாமல் போயிருக்கிறார். இவர் இஸ்கான் நிறுவனத்தில் நன்கொடை சேகரிப்பாளராக பணிபுரிந்து வந்திருக்கிறார். ஆனால் அவரது மனைவி சங்கீதா மிஸ்ரா(39 வயது) மற்றும் 17 வயது மகன் இருவரும் இதுகுறித்து போலீஸில் புகார் எதுவும் செய்யாமல் இருந்திருக்கின்றனர். இஸ்கான் நிறுவனத்தின் வற்புறுத்தலால் மே 27ஆம் தேதி மதுரா காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர்.
குஜராத்: பொது சுடுகாட்டில் பட்டியலினத்தவரின் சடலத்தை தகனம் செய்ய எதிர்ப்பு!
இஸ்கான் நிறுவனத்தைச் சேர்ந்த அவரது நண்பர்கள் அவரது கண் கண்ணாடியை வைத்து, அவர்தான் என அடையாளம் காட்டியிருக்கின்றனர். ஆனால் மனோஜ், பகவத் கீதை குறித்து வகுப்பெடுக்க பக்கத்து ஊர்களுக்குச் செல்வதால் அவர் இறந்திருப்பார் என்ற சந்தேகம் யாருக்கும் எழவில்லை என அவர்கள் போலீஸாரிடம் கூறியிருக்கின்றனர். இதுகுறித்து விசாரிக்க மனோஜின் மகனை பலமுறை காவல்நிலையத்திற்கு அழைத்திருக்கின்றனர். ஆனால் எந்த சட்டத்தின் அடிப்படையில் என்னை விசாரிக்கிறீர்கள் என்று கூறி காவல் நிலையத்திற்குச் செல்லாமல் தட்டிக்கழித்திருக்கிறார் மகன்.
இதனால் சந்தேகமடைந்த போலீஸார், அந்த சிறுவனின் செல்போனை வாங்கி சோதித்திருக்கின்றனர். அதில் அந்த சிறுவன் ‘க்ரைம் பேட்ரோல்’ என்ற தொடரை 100 முறைக்கும்மேல் பார்த்திருப்பது தெரியவந்திருக்கிறது. பலமுறை சிறுவனை விசாரித்ததில் மனமுடைந்து அழுத அவன் பல திடுக்கிடும் உண்மைகளைக் கூறியிருக்கிறான்.
மனோஜ் மிஸ்ரா, மகனை எப்போதும் திட்டிக்கொண்டே இருந்திருக்கிறார். இதனால் தனது தந்தைமீது இந்த சிறுவனுக்கு அளவுக்கு அதிகமான கோபம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் எந்தத் தடயமும் இல்லாமல் தந்தையை கொலைசெய்ய திட்டமிட்டிருக்கிறான். அதற்கு ‘க்ரைம் பேட்ரோல்’ என்ற தொடரைப் பார்த்து, அதில் வருவது போலவே, முதலில் மனோஜின் தலையில் இரும்புக்கம்பியால் தாக்கியிருக்கிறான். மயங்கிவிழுந்த அவரை ஒரு துணியால் கழுத்தை நெரித்து கொலைசெய்திருக்கிறான்.
பிறகு அன்று இரவே தாயாரின் உதவியோடு, தனது ஸ்கூட்டியில் அவரை ஏற்றி வீட்டிலிருந்து 5 கிமீ தூரத்திலுள்ள காட்டுப்பகுதிக்குக் கொண்டுசென்று, பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, தடயங்களை பாத்ரூம் க்ளீனர் கொண்டு அழித்திருக்கிறான். சொந்த தந்தையையே கொலைசெய்த குற்றத்திற்காக 17 வயது சிறுவன் மற்றும் அவரது தாயாரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களுடைய 11 வயது மகளை தாத்தா பாட்டியிடம் ஒப்படைத்துள்ளனர்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்