வாவ்வ்வ்வ்வ்வ்... புது கெட்டப்பில் சிம்பு : வாய் பிளக்கும் ரசிகர்கள்..!

simbu-new-look-goes-viral

கடந்த ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ’வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் நடித்திருந்தார் சிம்பு. அதற்பிறகு 90 எம்.எல் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். பின்னர் அவர் திரைப்படம் எதுவும் வெளியாகவில்லை. அவ்வப்போது வந்த அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.


Advertisement

image

அப்போது, உடல் எடை கூடிய சிம்புவை இணையவாசிகள் கலாய்த்து மீம் போட்டனர். வீட்டுக்குள்ளேயே ஓடி உடற்பயிற்சி செய்த சிம்புவின் வீடியோவும் ட்ரெண்டானது. அதே நேரத்தில் கிண்டலுக்கும் ஆளானது. ஆனால் தற்போது தன்னுடைய புகைப்படங்கள் மூலம் சிம்பு கிண்டலடித்தவர்களை வாயடைக்க செய்துள்ளார்.


Advertisement

சமீபத்தில் சமூக வலைதளங்களில் இணைந்த சிம்பு சுசீந்திரன் படமான ஈஸ்வரன் அறிவிப்பை வெளியிட்டார். அதில் சிம்புவின் ஒல்லியான தோற்றம் பலரையும் வியக்கச் செய்தது. இந்நிலையில் இன்று தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். உடல் எடை குறைத்து, நீண்ட தாடி வைத்து புதுக்கெட்டப்பில் சிம்பு உள்ளார். அவரது புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement