“என்னால் முடியவில்லை கருவை கலைத்துவிடுங்கள்”. வலி தாங்க முடியாமல் தீக்குளித்த கர்ப்பிணி!

Pregnant-woman-sets-herself-on-fire

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் கர்ப்பிணி பெண் தன்னுடைய உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

சென்னை புதுவண்ணாரப்பேட்டை இந்திரா நகர் குடியிருப்பு சேர்ந்தவர் சுஷ்மிதா(23). இவருக்கும் கார்பன்டரான நாகராஜ் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணமாகியுள்ளது. திருமணமாகி 13 மாதங்களான நிலையில் 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார் சுஷ்மிதா. கர்ப்பமான நாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர், வலி தாங்க இயலவில்லை கர்ப்பத்தை கலைத்துவிடுகிறேன் என பலமுறை வீட்டில் இருப்பவர்களிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.

image


Advertisement

ஆனால் வீட்டில் இருப்பவர்கள் வலியை பொறுத்துக் கொள்ளுமாறு கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு, சுஷ்மிதா தீவைத்துக் கொண்டுள்ளார். தீப்பற்றி எரிவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், சுஷ்மிதாவை உடனடியாக மீட்டு அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுஷ்மிதா பரிதாபமாக உயிரிழந்தார்.

துறைமுகம் -மதுரவாயல் இடையே ரூ.5000 கோடியில் 2 அடுக்கு பறக்கும் சாலை: நிதின் கட்காரி 

திருமணமாகி 13 மாதத்திற்குள் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement