சென்னையில் வீடுகள், சாலைகளை சூழ்ந்த மழை வெள்ளம் - ராட்சத வாகனங்கள் மூலம் நீர் வெளியேற்றம்

Heavy-rain-in-Chennai-Rainwater-accumulated-on-the-road-Motorists-suffer

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் மழையால் சாலையில் தேங்கும் மழைநீர். வாகனங்கள் மூலம் மழைநீரை உறிஞ்சி எடுத்துச்செல்லும் நகராட்சி ஊழியர்கள். கொரட்டூரில் வீடுகளில் மழை நீர் புகுந்ததாள் பொதுமக்கள் அவதிபட்டனர்.


Advertisement

 

image


Advertisement

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்தூர், மதுரவாயல், அம்பத்தூர், கொரட்டூர், ஆவடி, திருமுல்லைவாயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளது.

 


Advertisement

image

குறிப்பாக பூந்தமல்லி பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் அதிக அளவில் தேங்கி உள்ளது. இதனால் வாகனங்கள் மழைநீரில் ஊர்ந்து செல்கின்றன. காலை முதலே மழை பெய்ய தொடங்கியதால் வேலைக்குச் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். 

image

பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ள முக்கிய சாலைகளில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ராட்சத வாகனங்களைக் கொண்டு சாலையில் தேங்கியுள்ள மழை நீரை உறிஞ்சி எடுத்து செல்லும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது பூந்தமல்லி பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் ஆங்காங்கே நடைபெற்று வருவதால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

 image

அதேபோல் கொரட்டூர் ரயில் நிலையம் சாலை 49,50,51 ஆகிய தெருக்களில் மழைநீர் சூழ்ந்ததோடு 5 க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீருடன் கழிவு கலந்து புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் அவர்கள் வீட்டில் நுழைந்துள்ள நீரை வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement