ஒரு கொலையை மறைக்க 9 கொலைகள்... தெலுங்கானா போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

A-man-killed-9-members-to-cover-up-a-murder-of-a-woman

தெலுங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரைக் கொன்று உடல்களை கிணற்றுக்குள் மறைத்துவைத்த நபரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். ஒரு கொலையை மறைக்க அடுத்தடுத்து 9 பேரை கொலைசெய்ததாக போலீஸார் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.


Advertisement

9 சடலங்களை கிணற்றிலிருந்து மீட்ட போலீஸார், சஞ்சய் குமார் யாதவ்(24 வயது) என்ற நபரை மே மாதம் 25ஆம் தேதி கைதுசெய்தனர். கொரோனா ஊரடங்கு உச்சத்தில் இருந்தபோது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரின் உடல்கள் கொர்ரேகுண்டா கிராமத்தின் வயலிலிருந்த ஒரு கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது. ஊரடங்கு பொருளாதார பிரச்னைகளால் அவர்கள் இந்த முடிவுக்கு வந்ததாக போலீஸார் முதலில் சந்தேகித்தனர்.

நோயாளியின் கண்ணுக்குள்  20 புழுக்கள்:  மருத்துவர்கள் அதிர்ச்சி 


Advertisement

ஆனால் தடவியல் துறை மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தியபோது, இறந்தவர்களின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டு, உடல்களை யாரோ கிணறுவரை இழுத்துக்கொண்டு போயிருக்கக்கூடும் என போலீஸார் சந்தேகித்தனர்.

முதல் நாள் 48 வயதான மக்சூத், அவர் மனைவி நிஷா, இரண்டு மகள்கள் மற்றும் அவர்கள் உறவினரான புஷ்ரா காதுன் ஆகியோரின் உடல்களை மீட்டனர். இரண்டாம் நாள், மாக்சூத்தின் இரண்டு மகன்கள், அவர்கள் குடும்ப நண்பர் மற்றும் அந்தக் குடும்பமே வேலை செய்துவந்த கோணிப்பை தயாரிப்பு ஆலையைச் சேந்த இரண்டு ஆண்களின் உடல்களை மீட்டனர்.

image


Advertisement

விசாரணை மற்றும் சிசிடிவி காட்சிகளை வைத்து சஞ்சயை கைதுசெய்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில் தான் 9 பேரைக் கொலை செய்ததை ஒத்துக்கொண்டுள்ளார்.

பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதான சஞ்சய், வாராங்கலில் தங்கி வேலை செய்து வந்திருக்கிறார். இவர் நிஷாவின் உறவினரான 37 வயது ரஃபீகா என்ற பெண்ணை கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்திருக்கிறார். அவர்களது திருமணம் குறித்து ரஃபீகாவின் பெற்றோரிடம் பேசப்போவதாகக் கூறி அழைத்துச் சென்றிருக்கிறார். ரயிலில் செல்லும்போது மோரில் தூக்க மாத்திரையை கலந்துகொடுத்துவிட்டு அவரது கழுத்தை நெறித்துக் கொன்று ஓடும் ரயிலிலிருந்து வெளியே வீசியிருக்கிறார்.

திருமணத்தை நிறுத்த முயற்சி: பக்கத்து வீட்டுக்காரரின் கடையை இடித்த இளைஞர் ! 

வாராங்கலுக்கு திரும்பிவந்த சஞ்சய், நிஷா குடும்பத்தாரிடம், ரஃபீகா தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருப்பதாகக் கூறி சமாளித்திருக்கிறார். ஆனால் நிஷாவுக்கு அவர்மீது நம்பிக்கை வரவில்லை. எனவே உண்மையைக் கூறாவிட்டால் இதுபற்றி போலீஸாரிடம் செல்லவேண்டி வரும் என மிரட்டியிருக்கிறார்.

எனவே மே 20ஆம் தேதி, மாக்சூத்தின் மகன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள அவர்கள் வீட்டிற்குச்சென்ற சஞ்சய், உணவில் தூக்கமாத்திரையை கலந்திருக்கிறார். அதை சாப்பிட்ட ஒன்பது பேரும் சுயநினைவை இழந்திருக்கின்றனர். பிறகு இரவு 12.30 மணியிலிருந்து காலை 5 மணிவரை அவர்களை ஒவ்வொருவராக கிணற்றுக்குள் இழுத்துச்சென்று போட்டுவிட்டிருக்கிறார். அனைவரும் மூழ்கி இறந்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்ட சஞ்சய் அவர்கள் செல்போன்களை அங்கேயே போட்டுவிட்டு சென்றுவிட்டதாக போலீஸாரிடம் கூறியிருக்கிறார்.

image

போலீஸார் அவர்மீது 475 பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அதில் குற்றத்தை உறுதிப்படுத்த 67 சாட்சிகளையும் குறிப்பிட்டிருந்தனர். 36 நாட்கள் விசாரணைக்குப் பிறகு ஒரு கொலையை மறைக்க 9 கொலைகளை செய்த குற்றவாளியான சஞ்சய்குமாருக்கு, மாவட்ட நீதிபதி கே.ஜெயக்குமார் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். ஆனால் அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement