நோயாளியின் கண்ணுக்குள் 20 புழுக்கள்: மருத்துவர்கள் அதிர்ச்சி

Doctor-removes-20-live-worms-from-man-s-eyelid

சீனாவில் ஒரு மனிதரின் கண்ணிலிருந்து 20 உயிருள்ள புழுக்களை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது


Advertisement

 image

சீனாவில் நடந்த அதிர்ச்சியான ஒரு சம்பவத்தில், வான் என்ற 60 வயது நோயாளியின் கண்ணிலிருந்து 20 உயிருள்ள புழுக்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு அவர் தனது கண்ணில் ஏதோ ஒன்று நெளியக்கூடிய உணர்வுகளை உணர்ந்தார், இருப்பினும் அது சோர்வினால் ஏற்பட்டிருக்கும் என்று சாதாரணமாக இருந்துவிட்டார். கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் சுஜோ நகரத்தைச் சேர்ந்த வானுக்கு, தொடர்ந்து கண்ணில் வலி அதிகரித்ததால் சுஜோ நகராட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Advertisement

மருத்துவ பரிசோதனையின் போது டாக்டர் ஜி டிங், அவரின் வலது கண்ணிமைக்கு அடியில் சிக்கியிருந்த சிறிய புழுக்களின் தொகுப்பைக் கண்டறிந்தார். மருத்துவர் நோயாளியின் கண்ணிமையில் இருந்து புழுக்களை வெளியே இழுத்து தெளிவான பாத்திரத்தில் வைத்தார். நோயாளியின் கண் இமைகளிலிருந்து நூற்புழுக்கள் என்று அழைக்கப்படும் 20க்கும் மேற்பட்ட வெள்ளையான மெல்லிய உருளைபுழுக்கள் வெளியில் எடுக்கப்பட்டன. இந்த லார்வாக்கள் புழுக்களாக உருவாக 15 முதல் 20 நாட்கள் ஆகும் என்று டாக்டர் ஜி கூறினார். நூற்புழுக்கள் போன்ற ஒட்டுண்ணிகள் விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் ஒட்டிக்கொள்ளலாம் என்பதால் செல்லப்பிராணிகளின் சுகாதாரம் குறித்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டர் ஜி கேட்டுக்கொண்டார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement